குரங்குகள் பிடிப்பட்டன

குரங்குகள் பிடிப்பட்டன
X
குரங்குளை பிடிக்க வனத்துறையின் சார்பில், 8 இடங்களில் வைக்கப்பட்ட கூண்டில் 25 குரங்குகள் சிக்கின.

தஞ்சாவூர் மேல அலங்கத்தில் வசிக்கும் ராஜா - புவனேஸ்வரி தம்பதியின் பிறந்து 8 நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை கடந்த 13 ஆம் தேதி குரங்குகள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று குழந்தைகளை தூக்கிச் சென்றது. இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு பெண் குழந்தையை குரங்கு அகழியில் போட்டதில் குழந்தை பலியானது.


இதனால் குரங்குகளை உடனே வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது பூமரத்தான் கோவில் தெருவில் குரங்குகளைப் பிடிக்க 8 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. இந்த 8 கூண்டுகளிலும் குரங்குகளுக்கு பிடித்தமான வாழைப்பழம் போன்ற உணவு வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு வைக்கப்பட்ட எட்டு கூண்டுகளில் சுமார் 25 போனட் மெகாக் மற்றும் அல்ஃபா குரங்குகள் பிடிப்பட்டன. மேலும் பல குரங்குகள் அப் பகுதியில் சுற்றித் திரிவதால் வனத்துறையினர் மற்ற குரங்குகளை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினர் தெரிவிக்கையில் இது போன்ற குரங்கு தொல்லைகள் மற்ற பகுதிகளில் இருந்தால் அப்பகுதி மக்களும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர் மேலும் மாவட்ட வனத்துறை அதிகாரி யான இளையராஜா நேரில் பார்வையிட்டு பிடிபட்ட குரங்குகளை திருச்சி துறையூர் அருகே உள்ள பச்சை மலைப்பகுதியில் விடுமாறு உத்தரவிட்டார்.

Tags

Next Story