பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, லயன்ஸ் சங்கம் வழங்கியது

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, லயன்ஸ் சங்கம் வழங்கியது
X

பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு சமூக ஆர்வலர்கள் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை லயன்ஸ் சங்கம் வழங்கியது.

பேராவூரணி மனோரா லயன்ஸ் சங்கம் ஏற்பாட்டில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பாஸ்கர், டாக்டர் காமேஸ்வரி, டாக்டர் சந்திரசேகரன் ஆகியோரிடம், கொரோனா நோய்த்தொற்றாளர் பயன்பாட்டிற்கென, 2 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியினை மனோரா லயன்ஸ் சங்க தலைவர் வே.கார்த்திகேயன், செயலாளர் நிமல் ராகவன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் வழங்கினர். அப்போது செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

சமூக ஆர்வலர் நிமல் ராகவன், தொலைக்காட்சி திரைக்கலைஞர்கள் அமித் பார்கவ், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் கூட்டு முயற்சியில், மிலாப் நிறுவனம் நன்கொடை மூலம் ரூ 3 லட்சம் மதிப்பிலான 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் பெறப்பட்டு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளுக்கு தலா 1 கருவி வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!