பறிமுதல் மதுபானம், போலீசாரே விற்பனை செய்த அவலம், இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

பறிமுதல் மதுபானம், போலீசாரே விற்பனை செய்த அவலம், இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
X

பைல் படம்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை, விற்பனை செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்– இன்ஸ்பெக்டர், உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஊரடங்கு காரணமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன.

இதைத் தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில், சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை, போலீசார் மே 8ம் தேதி பறிமுதல் செய்தனர்.

ஆனால், அதை முறையாக வழக்குப் பதிவு செய்யாமல், தொடர்புடைய நபரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை, போலீசார், வேறொரு தனி நபரிடம் விற்று அந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார், உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார்.

மேலும், சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்– இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், எஸ்.எஸ்.ஐ., துரையரசன், ஏட்டு ராமமூர்த்தி ஆகியோரை, டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
Will AI Replace Web Developers