வயலுக்குள் புகுந்து தனியார் பேருந்து விபத்து : உயிர் தப்பிய பயணிகள்

வயலுக்குள் புகுந்து தனியார் பேருந்து விபத்து : உயிர் தப்பிய பயணிகள்
X

பேராவூரணி அருகே வயலில் இறங்கி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து

பேருந்து நிறுத்ததில் பயணிகள் நிற்பதை பார்த்து பேருந்தை நிறுத்தியபோது பிரேக் பிடிக்காமல் வயலுக்குள் இறங்கியது

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வயலுக்குள் இறங்கி விபத்துள்ளானதில் 5 பேர் லேசான காயமடைந்தனர். அதிருஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சுமார் 50 -க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரியலுாருக்கு சென்றது. அப்போது திருப்பனந்தாளை அடுத்த திருவாய்ப்பாடி வளைவில், தனியார் பேருந்து வேகமாக வந்தது. அப்போது பேருந்து நிறுத்ததில் பயணிகள் நிற்பதை பார்த்து, பிரேக் போடுவதற்கு, டிரைவர் முயன்ற போது, பிரேக் பிடிக்காமல், சாலையின் ஒரத்தில் இருந்த வயலுக்குள் இறங்கியது. இதில் பேருந்தின் உள்ளே இருந்த 5 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்தச்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறாடா கோவி.செழியன், வயலில் இறங்கி விபத்துக்குள்ளான பேருந்தை பார்வையிட்டு, காயமடைந்த பயணிகளை, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு