பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமாருக்கு கொரோனா

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக்  குமாருக்கு கொரோனா
X

சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்.

பேராவூரணி தி.மு.க..சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. என்.அசோக்குமார். இவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதோடு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அசோக்குமார் எம்.எல்.ஏ.கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!