குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணி மேற்கொள்ள கோரிக்கை

குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணி மேற்கொள்ள கோரிக்கை
X

பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன் தலைமையில், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சந்தித்தனர்

செந்தலைப்பட்டினத்தில் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணிகளை மேற்கொள்ள பேராவூரணி எம்எல்ஏ.விடம் கோரிக்கை

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன் தலைமையில், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, பேராவூரணி அருகிலுள்ள துறவிக்காடு ஜமாத்துக்கு சொந்தமான மையவாடிக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால், சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும். அங்குள்ள தர்கா செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் இருப்பதால், புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும்.

அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் செந்தலைப்பட்டினத்தில், மத்திய அரசு வனத்துறை மூலம் துறைமுகம் வரை சாலை அமைக்கும் திட்டம் கருத்துருவில் உள்ளது. இத்திட்டம் அமையப்பெற்றால் பல வருடங்களாக குடியிருந்து வருபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, குடியிருப்பவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!