பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் பலி

பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் பலி
X
பட்டுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மனைவி கண்முன்னே, கணவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் புள்ளான் விடுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் புண்ணிய நாதன்(42). இவர் சாலை பணியாளராக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது மனைவி சோபனாவுடன் பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்திற்கு உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது செருவாவிடுதி ஆற்றுப் பாலத்தைக் கடந்தபின் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த கார் எதிர் பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது. இதில் புண்ணிய நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சோபனா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் இறந்த புண்ணிய நாதன் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது.

மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்ட அந்த பிணவண்டி மாலை 6 மணி ஆகியும், அரசு மருத்துவமனை நுழைவாயிலில் இறந்த புண்ணிய நாதன் உடல் இருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!