பேராவூரணி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

பேராவூரணி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி
X

பேராவூரணி ஒன்றியக்குழுவின் துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த ஆல்பர்ட் குணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

அதிமுகவை சேர்ந்த யூனியன் தலைவருக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தீர்மானித்துள்ளனர்

பேராவூரணி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

பேராவூரணி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் துர்கா செல்வி தேர்தல் அலுவலராக செயல்பட்டார். இதில் திமுகவைச் சேர்ந்த ஆல்பர்ட் குணாநிதி போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், துரை மாணிக்கம், அமிர்தவள்ளி, சுந்தர், பாஜகவைச் சேர்ந்த பெரியநாயகி ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலையில், திமுக உறுப்பினர்கள் ஆல்பர்ட் குணாநிதி, மதிவாணன், அண்ணாதுரை, சங்கவி, ராஜப்ரியா, நவநீதம் உள்ளிட்ட 6 பேரும், அண்மையில் திமுகவில் இணைந்த மாலா, அதிமுகவைச் சேர்ந்த ராஜலெட்சுமி, பாக்கியம், இதுவரை அதிமுக ஆதரவாக இருந்த சுயேச்சை ரேவதி ஆகிய 10 பேரும் திமுகவைச் சேர்ந்த ஆல்பர்ட் குணாநிதிக்கு வாக்களித்தனர். வேறு எவரும் எதிர்த்து போட்டியிடாத நிலையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அதிமுக வேட்பாளர் சசிகலா ரவிசங்கர் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், தலைவருக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றனர். இதனால் பேராவூரணியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு, திமுக மாவட்டச் செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், ரவிச்சந்திரன், இளங்கோ மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பேராவூரணியில் பெரியார், அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story