மின்சாரம் தாக்கிய குழந்தையை காப்பாற்றிய தந்தை மரணம்..!

மின்சாரம் தாக்கிய குழந்தையை  காப்பாற்றிய  தந்தை மரணம்..!
X

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல்( வயது 34) இவர் பொறியியல் படித்துவிட்டு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா பெரும் தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் வீட்டில் இருந்து பணி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை அருந்து கிடந்துள்ளது. அதை அவரது இரண்டு வயது மகன் அன்புச்செல்வன் ஓடி போய் பிடித்திருக்கிறார். இதனை கவனித்த தந்தை மகனை காப்பாற்ற வேண்டும் என்று கதிர்வேல் தன்னுடைய மகனை தள்ளிவிட்டுள்ளார். இதில் கதிர்வேல் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடும் நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டார் . இவரது 2 வயது மகன் அன்புச்செல்வன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!