பேராவூரணியில் தொடர் மழை:பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

பேராவூரணியில் தொடர் மழை:பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி
X

 பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்

பேராவூரணியில் தொடர் மழை காரணமாக 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன இதில் 2 மாடுகள் 6 ஆடுகள் உயிரிழந்தன

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை 85 மில்லி மீட்டர் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் தொடர் மழை காரணமாக 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன, இதில் 2 மாடுகள், 6 ஆடுகள் இறந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. பொக்லைன் இயந்திரங்களை கொண்டு மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மழை சேதங்களை பார்வையிட்டு, மழைநீர் வடிய வடிகால்களை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!