அதிமுக பேராவூரணி வேட்பாளர் எஸ்வி திருஞானசம்பந்தம்

அதிமுக  பேராவூரணி வேட்பாளர் எஸ்வி திருஞானசம்பந்தம்
X

அதிமுக அறிவித்த பேராவூரணி வேட்பாளர் எஸ்வி திருஞானசம்பந்தம் பயோடேட்டா

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த வைரவன் சேர்வை. தங்கம் இவர்களின் மகன், எஸ்.வி.திருஞானசம்பந்தம் இவரது மனைவி பெயர் இந்திராணி, இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள்,மகன் அரவிந்த் வைரவன் எலும்பு முறிவு மருத்துவராக தற்போது படித்து வருகிறார். மகள் அலமுகார்த்திகா திருமணம் ஆகி உள்ளது. இவர் முத்திரையர் சமுகத்தை சேர்ந்தவர். இவர் 4. 8.1963 இல் பிறந்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்துள்ளார். கடந்த 1996, 2001 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேராவூரணி தொகுதிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து பத்து வருடங்களாக பேராவூரணி பகுதிக்கு எம்எல்ஏ வாக இருந்தார். பிறகு 2016 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தங்களது ஆதரவாளர்களுடன் தஞ்சை மாவட்ட கழக செயலாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தற்போது அதிமுக தஞ்சை மாவட்ட கழக அவைத் தலைவராக இருந்து வருகிறார். தற்போது அதிமுக தலைமைக்கழகம் பேராவூரணி பகுதிக்குஅதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளதையொட்டி அதிமுகவின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!