அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீத வாக்குகள் பதிவு

அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீத வாக்குகள் பதிவு
X

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வது வார்டுகளில் 27,542 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 17,338 பேர் வாக்களித்துள்ளனர். 13,519 ஆண் வாக்காளர்களில் 7,368 பேரும், 14,023 பெண் வாக்காளர்களில் 9,970 பேரும் வாக்களித்துள்ளனர். நகராட்சியில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!