பெற்றோரை இழந்த சிறுவனுக்கு பேராவூரணி எம்.எல்.ஏ உதவி

பெற்றோரை இழந்து பாட்டியுடன் பரிதவித்து வரும் சிறுவனுக்கு, பேராவூரணி எம்.எம்.எல்.ஏ., நிவாரணம் மற்றும் பொருட்கள் வழங்கியும், சிறுவனின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே களத்துார் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன், தச்சு தொழிலாளி. மனைவி ராஜேஸ்வரி. மகன் சபரிநாதன், 15. அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு முடித்துள்ளார்.சபரிநாதனுக்கு, 2 வயதாக இருந்த போது, தாய் ராஜேஸ்வரி இறந்துவிட்டார். தந்தை நீலகண்டன், பாட்டி லெட்சுமி, 70 அரவணைப்பில் வளர்ந்தான்.
இந்நிலையில் காய்ச்சல்ஏற்பட்ட நீலகண்டன் கடந்த, 23ம் தேதி உயிரிழந்தார். பெற்றோரை இழந்த சபரிநாதன், பாட்டியின் அரவணைப்பில் உள்ளார். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து, பேராவூரணி எம்.எல்.ஏ.,அசோக்குமார், சிறுவன் சபரிநாதன் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர்களுக்கு தேவையான மளிகை உள்ளிட்ட பொருள்களையும், 10 ஆயிரம் ரூபாய் தொகையையும் வழங்கினர். தொடர்ந்து, சிறுவனின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளுவதாகவும், வாழ்வாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த நிகழ்வில், களத்துார் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, தி.மு.க., கிளை செயலாளர் சீனிவாசன், தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீத், ஊரணி அறக்கட்டளை பொறுப்பாளர் ஆனந்தராஜ், ராஜூ மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu