மதுபோதையில் தகராறு செய்த வாலிபரை தட்டிக்கேட்ட இளைஞரிடம் ரகளை வீடியே வைரல்

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
சாலையில் மதுபோதையில் தகராறு செய்த வாலிபர்களை தட்டிக்கேட்ட இளைஞர் மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட 2 பேரை விரட்டி பிடித்தனர். கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் வீண் தகராறு செய்தவர்களை முத்துக்குமார் (29) என்ற வாலிபர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் முத்துக்குமாரை கற்களை வீசி தாக்கியுள்ளனர். இளைஞரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை டி.எஸ்பி. செங்கமலகண்ணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், ரகளையில் ஈடுபட்டு பைக்கில் தப்பிச் சென்ற வாலிபர்களை பிடிக்க முயன்ற போது இருவரும் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் விரட்டி சென்று பிடித்தனர். இதில் 2 பேரும் தப்பித்து செல்லும்போது கீழே விழுந்து இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 2 பேரிம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த சுரேந்தர் மற்றும் பவிக்குமார் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu