வைக்கோல் ஏற்றி ச்சென்ற டிராக்டர் மின்கம்பி உரசி தீப்பிடித்து சேதம்

வைக்கோல் ஏற்றி ச்சென்ற டிராக்டர் மின்கம்பி உரசி தீப்பிடித்து  சேதம்
X

வைக்கோல் ஏற்றிய டிராக்டரில், மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் ஏரிக்கரை சாலையில் சென்ற டிராக்டர் தீப்பிடித்து சேதமடைந்தது

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் ஏரிக்கரை சாலையில், சஞ்சய் நகர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த விவசாயி ஆல்பர்ட் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது போது சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக சென்ற மின் கம்பி வைக்கோல் மீது உரசியதில் வைக்கோல் மற்றும் டிராக்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.

அதிர்ஷ்டவசமாக விவசாயி ஆல்பர்ட் டிராக்டரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து தீப்பிடித்து எரிந்த டிராக்டர் மீது ஊற்றி அணைக்க முயற்சித்தும் பலன் அளிக்காததால், பின்பு இது குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் எரிந்துகொண்டிருந்த டிராக்டரை தண்ணீரை அடித்து அணைத்தனர். இதில் டிராக்டர் மற்றும் டிராக்டர் இருந்த வைக்கோல் அனைத்தும் எரிந்து சாம்பலானது..

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!