நாவல்பழம் பறிக்கச் சென்ற இரண்டு பள்ளி சிறுவர்களில் ஒருவர் சடலம் ஏரியில் மீடபு

நாவல்பழம் பறிக்கச் சென்ற   இரண்டு பள்ளி சிறுவர்களில் ஒருவர் சடலம் ஏரியில் மீடபு
X

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் வடக்கு முசிறி கிராமத்தில் நாவல் பழம் பறிக்கச்சென்ற போது காணாமல் போன பள்ளிச்சிறுவர்கள் 

இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு முழுவதும் சிறுவர்களை தேடினர்

நாவல்பழம் பறிக்கச் சென்ற இரண்டு பள்ளி சிறுவர்கள் மாயமான நிலையில், ஒருவர் உடல் ஏரியில் மீட்கப்பட்டது. மற்றொரு சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் வடக்கு முசிறி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகன் சிவசக்திவேல்(14), ஆலத்தூர் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் மகன் கமலேஷ்(11), இருவரும் நேற்று மாலை நாவல் பழம் பறிக்கச் செல்லவதாக வீட்டில் கூறிசென்றனர். இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து இவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு முழுவதும் சிறுவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், காலையில் சிறுவன் சிவசக்திவேல் உடல் இறந்த நிலையில் முசிறி ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கமலேஷன் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கமலேஷனும் ஏரிக்குள் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு வீரர்கள் ஏரிக்குள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!