தஞ்சாவூர் அருகே கொரோனா தொற்று இல்லாத கிராமம்: அசத்தும் ஊராட்சி தலைவர்

தஞ்சாவூர் அருகே கொரோனா தொற்று இல்லாத கிராமம்: அசத்தும் ஊராட்சி தலைவர்
X

தஞ்சை மாவட்டம் பள்ளிகொண்டான் ஊராட்சியில் ஊருக்குள் வருபவர்கள் அனைவருக்கும் டெம்பரேச்சர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் பள்ளிகொண்டான் தொற்று இல்லாத ஊராட்சியாக திகழ்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பள்ளிகொண்டான் ஊராட்சி கொரோனா இல்லாத ஊராட்சியாக விளங்குகிறது. சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் ஏராளமாக ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நோய் தொற்றிலிருந்து தனது ஊர் மக்களை காக்க ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் மகாலிங்கம் தனது ஊரின் எல்லையில் இரண்டு இடங்களில் செக்போஸ்ட் அமைத்தார்.

அந்த செக்போஸ்டில் பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் மற்றும் உணவினை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

கிராம மக்கள் அனைவருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் டெம்பரேச்சர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அவர்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிய வருகையில் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உடனடியாக அழைத்துச் செல்கிறார்.

இவ்வாறு இவரது தீவிர தடுப்பு நடவடிக்கையால் இந்த கிராமத்தில் நோய்த் தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள அவர் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கப்படும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்கு ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!