தஞ்சாவூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி தொற்று தடுப்பு பணியில் அசத்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் ஊராட்சியில் தொற்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வரும் நபர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சிறப்பு மையத்தை உருவாக்கி முன்னோடி ஊராட்சியாக திகழ்கிறது.
தமிழகத்திலே முதல்முறையாக தொற்று பாதிக்கபட்டவர்கள் தனிமை படுத்தி கொள்ள, கிராமத்தில் சிகிச்சை மையத்தை உருவாக்கிய முன்னோடி கிராமம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது வரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாள்தோறும் தொற்று எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நகரப் பகுதிகளை விட கிராமப் புறங்களில் தொற்று எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கொரோணா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு வீட்டு தனிமைபடுத்த அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் வீடுகள் சிறிய அளவில் உள்ளதால் வீட்டு தன்மையின் போது வீட்டில் உள்ள பலருக்கும் அவர்கள் தெருவில் உள்ள பலருக்கும் மேலும் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
போதுமான அளவிற்கு கிராமங்களில் கழிப்பிட வசதியும் இல்லாததால் மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இதனை தடுப்பதற்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி சார்பில் வீட்டு தனிமை கொடுத்தவருக்கு என தனியாக சிகிச்சை மையத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை கொரோனா தனிமைபடுத்தும் சிகிச்சை மையமாக மாற்றி அந்த கிராம பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு தனிமைக்கு வருபவர் ஒரு வார காலம் அங்கேயே தங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு தங்கும் அவர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் மருத்துவம் உணவு உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார துறை சார்பிலும் ஊராட்சி மன்றம் சார்பில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்து நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் தங்களை இங்கு ஒரு வார காலம் தனிமைப்படுத்திக் கொண்டு மேலும் தொற்று பரவுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர். இதுபோன்ற செய்வதன் மூலம் கிராமப்புறங்களில் மேலும் கொரோணா பரவலை தடுக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu