தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்

தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்
X

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் மீது அமமுகவினர் போலீசில் புகார் அளித்தனர்.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அமமுகவினர் புகார் அளித்தனர்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம், சசிகலாவை அவதூறாகப் பேசியும், அமமுக தொண்டர்களுக்கு மிரட்டலும் விடுத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் ராஜபிரபு தலைமையில் அமமுகவினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலாவை அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாமல், எங்களையும் மிரட்டிவிட்டு தற்போது நாங்கள் மிரட்டுவதாக அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சிவி சண்முகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!