பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்து: தஞ்சை தாசில்தார் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்து: தஞ்சை தாசில்தார் உயிரிழப்பு
X
பட்டுக்கோட்டையில், லாரி மீது டூ விலர் மோதிய விபத்தில், முத்திரைத்தாள் கட்டண தாசில்தார் சம்பவ இடத்திலயே பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, நம்பிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,55, இவர் தஞ்சாவூர் முத்திரைத்தாள் கட்டண தாசில்தாராக பணியாற்றி வந்தார். பட்டுக்கோட்டை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரமேஷ் தனது ஸ்கூட்டரில், நம்பிவயலில் இருந்து, பட்டுக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சூரப்பள்ளம் பைபாஸ் சாலை வந்துக்கொண்டிருந்த போது, சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த டாரஸ் லாரி மீது மோதியதில், ரமேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த தாசில்தார் ரமேஷ்க்கு, வசந்தகுமாரி என்ற மவைியும், ராம்குமார் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!