தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வென்ற பட்டுக்கோட்டை மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வென்ற பட்டுக்கோட்டை  மாணவ மாணவிகளுக்கு பாராட்டு
X

அறந்தாங்கியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகளை, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டு.

அறந்தாங்கியில் நடந்த போட்டிகளில் தமிழகத்தின் 32 மாவட்டங்களை சேர்ந்த 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளை, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் நேரில் வரவழைத்து பாராட்டினார்.

கடந்த 10ஆம் தேதி அறந்தாங்கியில், ஒக்கினவா கொஜீரியோ கராத்தே கழகம் சார்பாக தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 32 மாவட்டங்களை சேர்ந்த 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கராத்தே மற்றும் தற்காப்பு ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த மாஸ்டர் தயாளன் கராத்தே கழகம் ஒட்டுமொத்த பரிசுகளையும் தட்டிச்சென்றது. சுமார் 31மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர்.

ஒரே கழகத்தை சேர்ந்த 31மாணவ மாணவிகளும் பரிசு பெற்றதை பாராட்டி மூன்று அடி உயரமுள்ள சாம்பியன் கோப்பை சிறப்பு பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிலையில், போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் நேரில் வரவழைத்து அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள், மாணவ மாணவிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்