கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மௌலானாதோப்பைச் சேர்ந்தவர் மெய்யர் (52). இவரின் மனைவி சாந்தா (46). இவர்களின் மகன்கள் வெங்கடேஷ்வரன் (24), கார்த்தி (20). அறந்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த மெய்யர் பல வருடங்களுக்கு முன்பு மதுக்கூர் பகுதிக்கு குடியேறி வந்து பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் அத்திவெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரிடம்,
மெய்யர் தனது இரும்புத் தொழிலை மேம்படுத்துவதற்காக ராஜதுரையிடம் ஆறு வருடங்களுக்கு முன்பு ரூ.2,70,000 கடன் வாங்கியுள்ளார். அதை அவ்வப்போது திருப்பிக் கொடுத்தும் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியவில்லை. அத்துடன் வெளியிலும் கொஞ்சம் கடன் இருந்தது. இதையடுத்து தனக்குச் சொந்தமான இடத்தை விற்று ராஜதுரைக்கு ரூ.3.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார் மெய்யர். ஆனால், `அசல், வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்துக்கு மேல் தர வேண்டியுள்ளது, இன்னும் ரூ.1,40,000 தர வேண்டும்" என ராஜதுரை கூற, மெய்யர் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
அந்தப் பணத்தைக் கட்டமுடியாமல் தவித்த மெய்யர் குடும்பத்தினரை, தனக்குச் சொந்தமான தோப்பில் கொத்தடிமைகளாக ராஜதுரை வேலை செய்ய வைத்துள்ளார். கிட்டத்தட்ட 5 வருடங்களாக அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர். இது குறித்து பட்டுக்கோட்டை சப் கலெக்டர் பாலச்சந்திரன் புகார் வந்ததையடுத்து, அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் கொத்தடிமையாக நடத்துவது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாலச்சந்திரன் நேரிடையாக தோப்புக்குச் சென்று நான்கு பேரையும் மீட்டார். மேலும் கொத்தடிமையாக நடத்திய ராஜதுரையை காவல்துறையினர் கைது செய்தனர்.
மெய்யர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கொத்தடிமைகளாக நடத்தி வந்த ராஜதுரையை போலீஸார் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட நான்கு பேரும் தஞ்சாவூரில் உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக அவர்கள் நான்கு பேருக்கும் தலா ரூ. 20,000 என மொத்தம் ரூ. 80,000 தரப்படவுள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக அந்தக் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணமாக சுமார் ரூ.5 லட்சம் தருவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu