மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓபிஎஸ் - இபிஎஸ் இரவிலும் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்களை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் வழங்கினர்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே உள்ள சொக்கானூர் கிராமத்தில்மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஓபிஎஸ் - இபிஎஸ் இரவை கடந்தும் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே உள்ள சொக்கானூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் இரவிலும் ஆய்வு செய்தனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் மற்றும் பயிர்களை பார்வையிட்டவர்கள், விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். இன்று காலை கடலூரில் ஆய்வைத் தொடங்கிய ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு, இறுதியாக தஞ்சையில் இரவிலும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!