காட்டாற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து

காட்டாற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து
X
தனியார் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்து - 5 பேர் காயம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இன்று முற்பகல் தனியார் ஆம்னி பேருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்து பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நசுவினி ஆற்றில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
future of ai in retail