பட்டுக்கோட்டையில் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் ஹோட்டல் அதிபர்

பட்டுக்கோட்டையில் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் ஹோட்டல் அதிபர்
X
பட்டுக்கோட்டையில் கொரோனா ஊரடங்கில் ஆதரவற்ற நிலையில் இருப்போருககு ஹோட்டல் அதிபர் உணவு வழங்கி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் டி.எம்.ஆர் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருபவர் ஜி.டி.சிவா. இவர் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தின் பொழுது பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மூலிகை சூப்பை இலவசமாகக் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏழ்மையான நிலையில் உள்ள பொதுமக்கள் சாப்பாடு இல்லாமல் சிரமப்பட்டு வருவதை அறிந்த இவர்,

தினந்தோறும் காலை உணவாக ஊத்தப்பம், இட்லி, மற்றும் இடியாப்பம் உள்ளிட்டவைகளை ஏழை மக்களுக்கு அளித்து வருகிறார். அத்தோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் கொடுக்கும் சீட்டைக் கொண்டு வந்தால் அந்த சீட்டிற்கு இரண்டு டிபன் பார்சலையும் கொடுத்து விடுகிறார்.

இவரின் இந்த சமூக தொண்டை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் வெறும் ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதைப்போல ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்கு ஏற்ப பசியுடன் உள்ள ஏழை மக்களுக்கு உதவிட வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி