ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

பட்டுக்கோட்டை.யிலுள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகம்
பட்டுக்கோட்டையில் ரூ. 4,500 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், ஆய்வாளராக பணியாற்றியவர் கலைச்செல்வி(45). இவர் லஞ்சம் கேட்பதாக, அபி & அபி வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண், அந்தோணி யாகப்பா ஆகிய இருவரும், தஞ்சாவூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதில், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு ரூ. 2,500 -ம், ஏற்கெனவே பதிவு செய்து இரண்டு வாகனங்களுக்கான ஆர்.சி. புத்தகத்தை கொடுப்பதற்கு ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 4,500 -ஐ புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டதாகவும், லஞ்சம் தர விரும்பாததால் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர். இந்தப், புகாரின் பேரில், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார், பட்டுக்கோட்டை போக்குவரத்து வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மறைந்திருந்தனர். அப்போது, ரசாயனம் தடவிய ரூ.4,500 பணத்தாள்களை அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் புரோக்கர் கார்த்திகேயனிடம் வழங்கினர். அந்த பணத்தை கார்த்திகேயன், கலைச்செல்வியிடம் கொடுத்த போது ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து, லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu