மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு
X
பட்டுக்கோட்டை அருகே நுங்கு பறித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி மின்னல் தாக்கியதில் பலியானர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,28,. கூலி தொழிலாளி. இவர் மதியம், நண்பர்களுடன் நுங்கு வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரொன மழை பெய்ந்ததால், அருகில் உள்ள மரத்தில் சுரேஷ் ஒதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், அவரின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future