பட்டுக்கோட்டை புறவழிச்சாலைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்..!

பட்டுக்கோட்டை புறவழிச்சாலைகளில்  கொட்டப்படும் மருத்துவக்  கழிவுகள்..!
X
சாலைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், புறவழிச்சாலை, மதுக்கூரில் இருந்து வடசேரி செல்லும் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சாலையோரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இந்த மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனவும், மேலும் நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் உள்ளதால், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொட்டப்படும் இந்த மருத்துவக் கழிவுகளால் அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறும், சாலைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் மர்ம நபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai automation digital future