பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம்
X
வங்கி, இன்சூரன்ஸ்,ரயில்வே,தொலைத் தொடர்பு,பாதுகாப்பு,மின்சாரம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதைகைவிடவேண்டும்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும், மேலும் ஊதியத்தை 600 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து சிஐடியு சார்பாக, பட்டுக்கோட்டையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கி, தலைமை தபால் நிலையம் வரை நடைபெற்ற இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி