நான்கு வயது சிறுவன் சாதனை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு, சிவபாக்யதம்மாள் நகரைச் சேர்ந்த 4 வயது சிறுவன் திவ்யதர்ஷன். இவர் செல்லப்பிராணியாகிய 100 வகை நாய்களின் பெயர்களை, 54 நொடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார். சிறுவனின் சாதனையை நடுவர் ஹரிஷ் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்து அதற்கான சான்றிதழ் மற்றும் அப்துல்கலாம் உருவம் பதித்த கேடயத்தை வழங்கினார்.
இதில் 100 திருக்குறளை, 4 நிமிடம் 41 விநாடிகளிலும், 193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களை 2 நிமிடம் 26 விநாடிகளிலும், 50 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களை 31நொடிகளிலும், மகாபாரத்தின் 60 கவுரவர்களின் பெயர்களை 27 நொடிகளிலும், 118 தனிமங்களின் பெயர்களை 37 நொடிகளில் என 10 உலக சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu