திருச்சிற்றம்பலம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் சஸ்பெண்ட்

திருச்சிற்றம்பலம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் சஸ்பெண்ட்
X

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை காவலர் சிவசங்கரி.

சிறையில் இருந்த அதிமுக பிரமுகரை காவல் உடையுடன் பார்க்கச் சென்ற தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவு.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சிவசங்கரி(38). இந்நிலையில் இவர் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை செந்தில் என்பவரை காவல் உடையுடன் சிறையில் சென்று பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் விசாரணையின் அடிப்படையில், தலைமை காவலர் சிவசங்கரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சிறையில் இருக்கும் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலர் துரை செந்தில் என்பவர் கடந்த 14ஆம் தேதி விசாரணையின்போது காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி பின்பு தனிப்படை போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது