கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட விவசாயி சுப்ரமணியன்


வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கந்துவட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியக்கோட்டை, வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஏழு வயதில் தனலட்சுமி மற்றும் எட்டு வயதில் மகாலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்ப செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரமணி, வளர்மதி இவர்களிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணம் வசூலிப்பவர் பூமிநாதன் என்பவர் விவசாயி சுப்பிரமணியனிடம் பணம் வாங்கியதற்கு அதிக வட்டியுடன் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுத்தவர்கள், சுப்ரமணியத்தையும், அவர் மனைவியும் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறப்பட்ட நிலையில், மனமுடைந்த விவசாயி சுப்ரமணியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற மதுக்கூர் காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுப்ரமணியத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியத்தின் மனைவி சுமதி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் சென்று தனது கணவர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல் நிலையம் முன்பு அழுத காட்சி பார்த்தவர்கள் மத்தியில் கண் கலங்கச் செய்தது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி