பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவராக திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா தேர்வு

பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவராக திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா தேர்வு
X

பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவராக திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா தேர்வு செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவராக திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா தேர்வு செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில், திமுக கூட்டணி 13 இடங்களையும், அதிமுக கூட்டணி 13 இடங்களையும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் நகராட்சி சேர்மனை தேர்வு செய்வதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. திமுக கூட்டணியில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவருக்கான பதவி திமுகவிற்கா, அதிமுகவிற்கா என்று எதிர்பார்ப்பது கட்சியினரிடையே கடைசி நேரம் வரை இழுபறியாக இருந்தது.

முடிவில் பட்டுக்கோட்டை திமுக நகர பொறுப்பாளர் செந்தில்குமார் மனைவி சண்முகப்பிரியாவிற்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல அதிமுகவில் பிரபாகனி மற்றும் அதிமுக நகர செயலாளர் பாஸ்கர் மனைவி லதா பாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவியது, முடிவில் நகர செயலாளர் பாஸ்கர் மனைவி லதா பாஸ்கர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்றத் தலைவருகான மறைமுக தேர்தலில், பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் நகராட்சியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இன்று காலை பட்டுக்கோட்டை நகராட்சியில் கூடிய திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மறைமுக தேர்தலில் வாக்களித்தனர். அதனை தொடர்ந்து நகர்மன்றத் தலைவராக 32 வது வார்டு திமுக கவுன்சிலர் சண்முகப்பிரியா செந்தில்குமார் 22 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த லதா பாஸ்கர் 11 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். பட்டுக்கோட்டையில் வெற்றிபெற்ற 7 சுயேட்சை வேட்பாளர்களும் திமுக ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவிற்கு கூடுதலாக அதிமுக வாக்குகள் இரண்டு வாக்குகள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!