பிரதமர், நீதிபதியை விமர்சித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் கைது

பிரதமர், நீதிபதியை விமர்சித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் கைது
X

ஜமால் உஸ்மானி

பிரதமர், நீதிபதி மீது விமர்சித்து பேசிய புகாரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கைது செய்யப்பட்டார்.

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கூறி, மாணவிகளின் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம்ம் சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி, மேற்கண்ட தீர்ப்பை வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளை தவறாக பேசியதாகவும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் பேசியதாக புகார் எழுந்தது.

இது குறித்து, ஏரிப்புறக்கரை வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஜமால் உஸ்மானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!