முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

முகவர்களுக்கு கொரோனா  பரிசோதனை
X

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், வேட்பாளர் முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குகள் வரும் இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர்களுக்கு பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அடுத்து இன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சி முகவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!