மல்லிப்பட்டினத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் காங்கிரஸ் கோரிக்கை புறக்கணிப்பு

மல்லிப்பட்டினத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில்  காங்கிரஸ் கோரிக்கை  புறக்கணிப்பு
X

பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டிணம் கிராமசபைக்கூட்டம் தொடர்பாக சார்-ஆட்சியரிடம் புகார் அளித்த காங்கிரஸ் கட்சியினர்.

காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை பெற மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மல்லிப்பட்டினத்தில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மக்கள் நலன் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஊராட்சி மன்றத்தலைவர் அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக கூறி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் சார்பில் கோரிக்கை. அளிக்கப்பட்டது. ஆனால், கோரிக்கை மனுவை அதிமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா மற்றும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் வாங்க மறுத்தனராம்.

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாவட்டத் தலைவர் நாகூர் கனி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், சார் ஆட்சியர் பாலச்சந்தரை நேரில் சந்தித்து, மல்லிப்பட்டினத்தில் பகுதியில், மக்கள் நலன் சார்ந்து காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை பெற மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தங்களது கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காண வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!