மானியத்தில் உழவு இயந்திரங்கள்: விவசாயிகள் பயன் அடைய ஆட்சியர் வேண்டுகோள்

மானியத்தில் உழவு இயந்திரங்கள்: விவசாயிகள் பயன் அடைய ஆட்சியர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர்.

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதன்படி அதிகபட்சமாக நெல் நாற்று நடவு செய்யும் சிறிய வகை இயந்திரங்களுக்கு 1.5 லட்சமும், நெல் நாற்று செய்யும் பெரிய வகை இயந்திரங்களுக்கு ஐந்து லட்சமும், வைக்கோல் கட்டும் கருவிகளுக்கு இரண்டு லட்சமும், களையெடுக்கும் இயந்திரங்களுக்கு 0.35 லட்சமும், அறுவடை இயந்திரங்களுக்கு 11 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தினை உழவன் செயலில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story