பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதை

பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதை
X

பட்டுக்கோட்டை அழகிரியின் 121 வது பிறந்த தினத்தையொட்டி தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Pattukottai Alagiri -பட்டுக்கோட்டை அழகிரியின் 121 வது, பிறந்த தினத்தை முன்னிட்டு, அழகிரியின் நினைவிடத்தில், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Pattukottai Alagiri -தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அழகிரியின், 121 வது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்.

இதில் சார் ஆட்சியர் பாலச்சந்தர், வட்டாட்சியர் தரணிகா மற்றும் அழகிரியின் குடும்பத்தினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு, அழகிரியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பின்னர் தானிய கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சிதலைவர், தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டும் என்பதற்காக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவாசயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், விலையில்லாமல் உரங்கள், விலையில்லாமல் பசுந்தால் உரங்கள், மானிய விலையில் வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை குறுவை சாகுபடிக்கு ஏறத்தாழ 1 இலட்சம் ஏக்கர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற வகையில் செயல்படுத்தபட உள்ளது. மேலும் குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் 82 ஆயிரம் 300 விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business