ஆத்திக்கோட்டையில் மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு

ஆத்திக்கோட்டையில் மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு
X

சபரி

பட்டுக்கோட்டை அருகே ஆத்திக்கோட்டை கிராமத்தில், மின்சாரம் தாக்கி இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஆத்திக்கோட்டை மேற்கு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் கூலி தொழிலாளி இவரது மகன் சபரி (வயது ஏழு) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்ற சபரி நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டிலுள்ளவர்கள் அக்கம் பக்கம் முழுதும் தேடி பார்த்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் 1மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தான். இதுபற்றி பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் புகார் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். காவல்துறையினர் இந்த சிறுவன் இறந்தது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம், இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!