பிரதமர் படம் எங்கே? பட்டுக்கோட்டையில் பாஜகவினர் திடீர் போராட்டம்
கொரோனா தடுப்பு ஊசி முகாம் விளம்பரத்தில், பிரதமர் படம் இல்லை எனக்கூறி, பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்.
தமிழகம் முழுவதும், நாளை பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பாக, நாளை 33 வார்டுகளில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் ஏற்பாடுகளை, நகராட்சி நிர்வாகம் செய்து அதற்கான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சி சார்பாக அடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெறவில்லை என்று கூறி, பட்டுக்கோட்டை நகர பாஜகவினர், நகராட்சிஅலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில், பாரத பிரதமர் நரேந்திர மோடி படம் இடம் பெற வேண்டுமென ஆனையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில், பாரத பிரதமரின் படம் இடம் பெறவில்லை என்றால் பாஜக சார்பில் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu