காவல்நிலையத்தில், இருந்து தப்பியோடிய அதிமுக நிர்வாகி கைது

காவல்நிலையத்தில், இருந்து தப்பியோடிய அதிமுக நிர்வாகி கைது
X

தப்பியோடிய அதிமுக நிர்வாகியை கைது செய்த தனிப்படை போலீசார். 

தஞ்சை காவல்நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற அதிமுக நிர்வாகியை தனிப்படை போலீசார் கைது செய்தனர் .

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் ஜெகன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பகுதியை சேர்ந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைசெந்தில் என்பவரை நேற்று முன்தினம் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

ஆனால் விசாரணையின் போது, தனது ஆதரவாளர்கள் உதவியுடன் காவல் நிலையத்தில் இருந்து துரைசெந்தில் தப்பி சென்றுவிட்டார். இது தொடர்பாக ஏற்கனவே 31 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற துரைசெந்திலை தனிப்படை காவல்துறையினர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கைது செய்து, தஞ்சைக்கு அழைத்து வந்தனர். மேலும் தப்பிச் செல்ல உதவியாக இருந்த காமராஜ், ராஜவர்மன், ஜவகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai marketing future