"ஸ்டாலின் சிறந்த ஆட்சியினால் அதிமுக கவுன்சிலர்களும் திமுகவுக்கு வாக்களித்தனர்" -எம்பி பழனிமாணிக்கம்

ஸ்டாலின் சிறந்த ஆட்சியினால் அதிமுக கவுன்சிலர்களும் திமுகவுக்கு வாக்களித்தனர்  -எம்பி பழனிமாணிக்கம்
X

பட்டுக்கோட்டை நகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி. திமுக அதிமுக 13 - 13 சம வாக்குகள் இருந்த நிலையில், 33 வாக்குகளில் 22 வாக்குகளை பெற்று திமுக வென்றது. ஸ்டாலின் அவர்களின் சிறந்த ஆட்சியினால் அதிமுக கவுன்சிலர்களும் திமுகவுக்கு வாக்களித்ததாக எம்பி பழனிமாணிக்கம் பேட்டி.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று, 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக கூட்டணி 13, அதிமுக கூட்டணி 13 என்ற சமநிலையிலும், சுயேச்சைகள் 7 பேரும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து இன்று நகராட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சண்முகப்பிரியா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லதா பாஸ்கர் 11 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இந்நிலையில் சுயேச்சை கவுன்சிலர்களின் 7 வாக்குகள் மற்றும் அதிமுக கவுன்சிலர்களில் 2 வாக்குகள் திமுகவுக்கு கிடைத்து, மொத்தம் 22 வாக்குகள் கிடைத்தது. இதுபற்றி எம்பி பழனிமாணிக்கத்திடம் கேட்டபொழுது தற்பொழுது ஸ்டாலின் அவர்களின் சிறந்த ஆட்சியை வரவேற்கும் விதமாகவும், ஆதரவு கொடுக்கும் விதமாகவும் அதிமுகவினர் திமுகவிற்கு வாக்களித்து இருக்கலாம் என்றார். இந்நிலையில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சண்முகப்பிரியாவிற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!