அதிராம்பட்டினத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது.

அதிராம்பட்டினத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது.
X

கீழத்தோட்டம் கடற்பகுதியில் படகில் வந்த இரண்டு இலங்கை வாலிபர்கள்

கீழத்தோட்டம் கடற்பகுதியில் படகில் வந்த இரண்டு இலங்கை வாலிபர்களிடம் அதிராம்பட்டினம் கடலோர காவல்படை போலீசார்கள் தீவிர விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கீழத்தோட்டம் கடற்பகுதியில், இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்று கடலில் இருப்பதைக் கண்ட அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த படகை ஆய்வு செய்தபோது அந்தப் படகு இலங்கையைச் சேர்ந்த படகு என்பதும் அவர்களிருவரும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து படகையும் அவர்களையும் அதிராம்பட்டினம் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அவர்களிடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த 2 இளைஞர்களும் தெரிவித்த தகவலின்படி இலங்கையைச் சேர்ந்த மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ரோஷன் எனவும் அவர்கள் மீன்பிடிக்க வந்ததாகவும் படகு பழுதானதால் இரண்டு தினங்களாக கடலில் தத்தளித்ததாகவும் தற்போது படகு கரை தட்டி இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

இருந்தும் போலீசார் அந்த இரண்டு வாலிபர்கள் இடத்தில் படகுக் உரிய ஆவணங்களோ , அவர்களிடம் எந்தவித அடையாள அட்டையோ இல்லாததை அடுத்து அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? வேறு ஏதேனும் காரணத்திற்காக இங்கு வந்தார்களா ?இவர்களுக்கு இப்பகுதியில் யாரேனும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்