வீடுகளுக்கே சென்று கபசுர குடிநீர் வழங்கும் சித்த மருத்துவர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு உதவி மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் அருண்குமார்..இவர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகள் என அனைவருக்கும் பணிக்கு வந்த உடனேயே கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் என வழங்குகிறார்,
கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான விழிப்புணர்வுகளையும் இயற்கை உணவு முறைகளையும் கூறி அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.அத்துடன் தற்போது பட்டுக்கோட்டை பகுதியில் அதிகமான நோய்த்தொற்று உருவாகி வரும் நிலையில்,
மனவேதனை அடைந்த இவர். தனது பணி நேரம் முடிவடைந்ததற்குப் பிறகும் தனது பைக்கில் கபசுர குடிநீர் தயார் செய்து எடுததுக் கொண்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குகிறார்.
கொரோனாவிலிருந்து காத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் பொதுமக்கள் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பொதுமக்களிடம் எடுத்து கூறி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அரசு பணியில் இருக்கும் ஒரு சில அரசு அலுவலர்கள் பணியை முழுமையாக செய்யாமல் மெத்தனம் காட்டிவரும் நிலையில், இவர் தனது பணி நேரம் முடிந்தபிறகும் சமூக பணி ஆற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu