/* */

தஞ்சையில் நீரில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை நீத்த தாய்

தஞ்சையில் நீரில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சையில் நீரில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை நீத்த தாய்
X

உயிரிழந்த ஸ்டெல்லா.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட். இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஸ்டெல்லா வயது 47.

இந்நிலையில் ஸ்டெல்லா அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தன்னுடைய இரு மகள்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கரையில் நின்று குளித்துக் கொண்டிருக்கும்போது, இளையமகள் பெனினால் தண்ணீரில் திடீரென மூழ்கினார். இதனை அடுத்து மூத்த மகள் வின்சி நீரில் மூழ்கிய தங்கையை காப்பாற்ற முயன்ற வேளையில் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதனால் செய்வதறியாது திகைத்த ஸ்டெல்லா, உடனடியாக தண்ணீரில் இறங்கி மகள்கள் இருவரையும் கரைப்பகுதியில் தூக்கி போட்டுள்ளார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வந்து இந்த இரு பெண் குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஸ்டெல்லா தண்ணீரில் மூழ்கி கைகள் மட்டும் வெளியில் தெரிய அந்த இளைஞர்கள் நீச்சல் அடித்து சென்று ஸ்டெல்லாவை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இரு மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை நீத்த தாய் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு