3 லட்சத்து 77 ஆயிரம் பறிமுதல்

3 லட்சத்து 77 ஆயிரம் பறிமுதல்
X
பட்டுக்கோட்டை பகுதியில் முறையாக ஆவணம் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 3 லட்சத்து 77 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரங்குறிச்சி கடைத்தெரு பகுதியில் மதுக்கூர் பிடிஓ வீரமணி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டைக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்ததில் முறையான ஆவணம் இல்லாமல் இருந்த ரூ 3 லட்சத்து 77 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கப் பணத்தை வீரமணி தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை கண்காணிப்பு குழுவினர் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தரணிகா விடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story