தேர்தல் விழிப்புணர்வு- சிறுமி உலக சாதனை

தேர்தல் விழிப்புணர்வு- சிறுமி உலக சாதனை
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்காக 9 வயது சிறுமி 2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து - மாலா தம்பதியரின் மகள் வர்ஷிஹா (9). நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டும், வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது ஜனநாயக உரிமையான வாக்கை யாருக்கும் விற்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மாணவி 2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை படைத்தார்.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கிய நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், டிஎஸ்பி. புகழேந்தி கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சாதனை படைத்த மாணவி வர்ஷிஹாவை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் நோபல் உலக சாதனை சான்றிதழ் வழங்கி நோபல் உலக சாதனைக்கான பதக்கத்தை அணிவித்துப் பாராட்டினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!