தேர்தலை புறகணிக்க போவதாக அறிவிப்பு

தேர்தலை புறகணிக்க போவதாக அறிவிப்பு
X
மகளிர் சுய உதவிக் குழுக்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்யவில்லை என தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு ஊராட்சியில் உள்ள பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்யவில்லை என்று வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அமர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் தமிழக முதல்வர் விவசாயக் கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் நிலமுள்ள விவசாயிகளின் நகைக்கடன் உள்ளிட்டவை கூட்டுறவு வங்கியில் தள்ளுபடி ஆனது. நிலம் இல்லாத ஏழை விவசாயிகளின் நகை கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி ஆகாததால் ஆத்திரமடைந்த பெண்கள் இதுகுறித்து நேற்று பேராவூரணி தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டனர். பின்பு இன்று காலை ஈசிஆர் சாலையில் ஒன்றுதிரண்டு அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலையோரங்களில் அமர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட நகைக்கடன் விவசாய கடன் தள்ளுபடி செய்யாவிட்டால், சாலை மறியல் போராட்டமும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு