பாரம்பரியத்தை நினைவூட்டிய திருமண வரவேற்பு

பாரம்பரியத்தை நினைவூட்டிய திருமண வரவேற்பு
X
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 51 வகையான பாரம்பரிய நெல் வகைகளை காட்சிப்படுத்தி, தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பத்தை அரங்கேற்றிய மணமக்கள் குடும்பத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மணமக்கள் வெற்றிச்செல்வன் - ப்ரீத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. திருமண வரவேற்பில் சீரகசம்பா, தூயமல்லி, திணை, பிசினி, மாப்பிள்ளை சம்பா உள்பட 51 வகையான பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பார்த்து வியந்தனர். அதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிலம்ப பாரம்பரிய பள்ளி மாணவர் மாஸ்டர் தேவேந்திரன் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சி மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்தது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil