மாநில அளவிலான கைப்பந்து போட்டி- நத்தம் அணி சாம்பியன்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி- நத்தம் அணி சாம்பியன்
X

பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற மாநில அளவிலான, மின்னொளி கைப்பந்து போட்டியில் நத்தம் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் மேலத்தெருவில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 20 வது ஆண்டு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 26 அணிகள் பங்கு பெற்று விளையாடின. பல்வேறு சுற்றுகளுக்கு பிறகு நத்தம் அணியும் - அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நத்தம் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற முதல், இரண்டு, மூன்றாம் பரிசை வென்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!